Showing posts with label சிறு துளிகள். Show all posts
Showing posts with label சிறு துளிகள். Show all posts

Sunday, August 2, 2009


இல்லை இல்லை !!!

கனவில் வருவதில்லை !!
எப்பொழுதும் நினைப்பதில்லை !!
கவிதை தேவை இல்லை !!
கடிதம் தேவைஇல்லை !!
கண்ணீர் தேவை இல்லை !!
யாருக்கும் புரியவைக்க தேவையில்லை !!
எவரும் தவறு என்று சொன்னதில்லை !!
தேடி அலைய தேவையில்லை !!
பொய்மைக்கு இடமே இல்லை !!
காதலுக்கு கல்யாணம் முடிவு போல
உறவுக்கு அடுத்த உறவே முடிவு போல
உயிர்க்கு சாவு முடிவு போல
இதற்க்கு முடிவே இல்லை !!

~~ நட்பு

அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் !!!

Friday, June 5, 2009

காதல் !!!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு நிமிடமும்
என்னை மறந்து இருந்தேன் !!!

உன்னை நினைக்கும்போதெல்லாம்
காற்றில் மிதந்தேன் !!!

நீயும் நானும் சேர்ந்து நாமாக மாறும் போது
உலகமே எனக்கு கீழே என்று கர்வம் கொண்டேன் !!!

உனக்காகவே வீட்டையும் நாட்டையும்
எதிர்த்தேன் !!!

எப்போவும் நீ என்னோடு இருக்க வேண்டும்
என்று என்னினேன் !!!

நீயும் என் கூடவே இருந்தாய்
நான் இறந்தேன் !!!


பின் குறிப்பு - குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு !!!

Sunday, May 24, 2009

கொல்லுதே!!!

நாம யார பத்தி அதிகம் நினைக்கிறோமா இல்ல எத பத்தி அதிகம் நினைக்கிறோமா அதை பற்றி தான் தோனும் போல. இரண்டு நாட்க்களுக்கு முன்னால் கண்ட நாள் முதல் படம் பார்த்தேன் அதில் பிரசன்னா ஒரு வசனம் சொல்லுவான்

"பாத்தாலும் கொள்ளுறா பாக்காட்டியும் கொள்ளுறா" காதலில் மாட்டி கொண்ட ஒருவன் விரக்தியில் சொன்ன நல்ல வசனம் ...

நமக்கு தான் அதெல்லாம் இல்லையே ... இந்த வசனத்தை கேட்ட உடன் எனக்கு தோன்றியது

"அடிச்சாலும் கொல்லுது அடிக்கிலேனாலும் கொல்லுது " - சிகரட் :(((((((((((

எச்சரிக்கை - புகை பிடித்தல் உடல் நலத்துக்கும் உயிருக்கும் கேடு !!!

Monday, April 13, 2009

தமிழ் !!!


நாட்டில் இருந்த வரை
உன்னை நினைத்தது கிடையாது

நாடு கடத்த பட்டேன்
உன்னை இழக்க ஆரம்பித்தேன்
தேட தொடங்கினேன்

தேடினேன்
காற்றில் தேடினேன்
கனவில் தேடினேன்
புத்தகத்தில் தேடினேன்
வானொலியில் தேடினேன்
தொலைகாட்சியில் தேடினேன்
கணிப்பொறியில் தேடினேன்

கடைசியில் ஒரு தமிழனிடம்
கண்டுபிடித்தேன்

"நான் தமிழ் நீங்கள் தமிழா ? "
என்று அவன் என்னை கேட்டபோது

தமிழுக்கு அமுதென்று பெயர் வைத்தவரை
மீண்டும் ஒரு முறை வணங்கினேன்

வாழ்க தமிழ் !!! வளர்க தமிழ் !!!

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

Tuesday, April 7, 2009

தேர்தல் திருவிழா !!!

தெருக்களில் கொடிகள்
அதில் கொள்கைகள் !!!

சுவர்களில் சுவரொட்டிகள்
அதில் சாதனைகள் !!!

கம்பங்களில் ஒலிபெருக்கிகள்
அதில் தத்துவங்கள் !!!

மேடையில் தலைவர்கள்
அதில் உறுதிமொழிகள் !!!

வீதியில் மக்கள்
அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறிகள் !!!

இது தான் தேர்தல் திருவிழா :(((( !!!

Tuesday, March 10, 2009

ஏமாற்றாதே !!!

நான் ஒவ்வொரு முறை ஏமாரும்போதும்
என்னுள் நான் சொல்லிகொள்வது
அடுத்தவர்களை
ஏமாற்றாதே என்று !!!

Friday, February 6, 2009

இருட்டில் தேடுகிறேன் !!!


அரண்டு போய் இருக்கிறேன்
இருண்டதெல்லாம் பேயாக தெரிகிறது !!!
எதிர்காலம் கண்ணுக்கு தெரிய கூடாத
என ஏங்குகிறேன்
நிகழ காலமோ இருண்டு இருக்கிறது
இருட்டில் தேடுகிறேன்
வெளிச்சமான எதிர்காலத்தை
எதுவும் தென்படவில்லை
அய்யோ எதிர்காலமும்
இருண்டதாக இருக்குமோ ??? :(((

naan oru software enginner enakku ippo vela illa future la vela kidaikuma ennanu therla kidaikumngarathu arikuri yae illa ... appo naan ennuale ulari kondathu ....

Sunday, January 25, 2009

நாம் முறமா சல்லடையா ???

முறமும் சல்லடையும் ஒரே வேலை தான் செய்கின்றன
இரண்டும் நல்லவையையும் கெட்டவயையும் பிரிக்க உதவுகின்றன
ஆனால்
முறம் நல்லவையை வைத்துக்கொண்டு
தீயவைகளை விட்டுவிடுகிறது
சல்லடையோ தீயவைகளை வைத்துக்கொண்டு
நல்லவைகளை விட்டுவிடுகிறது
நாம் யார் ???

Source - Leoni pattimandram

Wednesday, January 7, 2009

வாழ்க இந்தியா !!!

அமெரிக்காவில் காலடி பட்டது
கண்கள் அகல விரிந்தது
நாம் இரண்டாய் போய் விட்டோமே
நான்காக இருந்திருக்க கூடாத என நினைத்தது !!

அழகு எங்கு பார்த்தாலும் அழகு
சாலையில் ஓடும் கார் முதல்
மாலையில் நடக்கும் நாய் வரை அழகு !!

சுத்தமான காற்றை சுவாசிக்கிறேன்
என்றது நாசி !

சுகாதரமான உணவை உன்னுகிறேன்
என்றது வயிர் !

இப்பொழுதெல்லாம் என் மேல் தூசியே படுவதில்லை
என்றது கால்கள் !

கணினியை முத்தமிடும் சுகமே சுகம்
என்றது கைகள் !

எதை பார்த்தாலும் பார்த்த உடனே ஆ
என்றது வாய் !

அரிசியை மறந்த நாக்கு
சிக்கெனுக்கும் சீஷுக்கும் அலைந்தது !

செந்தமிழா அப்படி என்றால் என்ன
என்றது செவி !

ஒவ்வொரு மாதம் முதல் தேதியும்
ராமானுஜ கணக்குகள் போட்ட மூளை
உன் கனவுகள் நிறைவேற போகிறது என்றது

உடல் சிலிர்த்தது
உள்ளம் சிரித்தது
மாயை கண்டு மயங்கியர்வர்கள்
மாண்டு போகும் வரை
தாய் நாடு தழைக்காது என்றது

கதாநாயகனை போல் என்னால்
உடனே ஊருக்கு புறப்பட முடியவில்லை
மனசாட்சியை ஊமை ஆக்க
முடியவில்லை
என்னை செவிடு ஆக்கி கொண்டு
இன்னும் அமெரிக்காவில் இருக்கிறேன் :((((
இந்தியா வாழ்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் !!!

வாழ்க இந்தியா !!!

Wednesday, December 24, 2008

லட்சியம் !!!

லட்சியங்கள் ஏன் தோற்று போகின்றன என்று நான் நேற்று நினைத்த போது என்னுள் நானே உழறி கொண்டது ....

சூழ்நிலையா லட்சியமா
என்ற சூழ்நிலையில்
சூழ்நிலை வென்று விடுகிறது !!!

விட்டில் பூட்சியாவது
விளக்கும் அணையும் வரை இருக்கும்
ஆனால்
லட்சியங்கள் இறந்தே பிறக்கின்றன சூழ்நிலையால் !!!

லட்சியம் தன் சிறகை விரித்து
பறக்கும் போது
சூரியனையும் குளிர செய்யலாம்
வானையும் அளந்து பார்க்கலாம் !!!

மேல் கிளாஸ் இன் லட்சியம்
ஊருக்கு உதவாது !!!
மிடில் கிளாஸ் இன் லட்சியம்
வெளியவே வராது !!!
லோ கிளாஸ் க்கு லட்சியமே
கிடையாது !!!
இது தான் லட்சியம் படும் பாடு :(

Tuesday, December 23, 2008

யாருக்கும் தெரிவதில்லை !!!

கடலில் கண்ணீர் விடும் கண்களும் !
காதலில் கண்ணீர் விடும் இதயங்களும் !!

மனிதாபிமானம் !!!

நான் சாகும் போது கூட
என்னை உன் கைகளில் ஏந்தி
முத்தமிட்டு
உயிர் பிரிந்தபின் அடக்கம் செய்கிறாய்
"
ஆஸ்த்ரயேஇல்"
உன் எதிரி என்று தெரிந்தும்
இது தானா மனிதாபிமானம் ???