Friday, April 24, 2009

IPL காமெடிகள் பாகம் - 1 (Rajaasthan royals vs Kolkatta knight riders 10th match 23/04/2009)!!!

ஷாருக் கான் : கங்குலி நீ அந்த ரெண்டு பால் பொறுமையா விளையாடி இருந்துருந்த இன்னைக்கு நாம ஜெயிசுருக்கலாம்ல ???

கங்குலி : ஏன் கெட்ட நேரம் அப்போன்னு பாத்து என் கண்ணுல ஸ்கோர் போர்டு பட்டுருச்சு ... அத பாத்துட்டு நானா அவளோ ரன் அடிச்சேன்னு confuse ஆனா நேரத்துல அவுட் பண்ணிடாங்க ...

ஆமா நெஜமாலுமே நான் தான் அவளோ ரன் அடிச்சனா ?

ஷாருக் கான் : யாரங்கே ???

மென்டிஸ் : சொல்லுங்க எஜமான் ...

ஷாருக் : இதுக்கு அவனே பரவால (தலைல அடிச்சிகிட்டே)

-----------------------------------------------------------------------------------------------

வார்னே : மச்சான் கும்முன்னு ஒரு பௌன்செர் போடு கங்குலிய அவுட் பண்ணிரலாம் ...

முனாப் படேல் : பௌன்செர்னா என்ன மச்சான் ???

வார்னே : டேய் நீ ஒரு பாஸ்ட் பவுலர்டா ...

முனாப் : அப்படி தாண்டா மச்சான் எல்லோரும் சொல்லுறாங்க நீயும் நம்பிட்டயாடா ?

வார்னே : கடவுளே என்ன காப்பாத்துப்பா ....

(கங்குலி அந்த ஓவர்ல அடி மரண அடி ... அந்த ஓவர் முடிஞ்ச உடனே)

வார்னே : அந்த கடவுளே வந்தாலும் இனிமே உன்ன காப்பாத்த முடியாதுடா ...

முனாப் : புதுசா எதாவது சொல்லு மச்சான் ...

வார்னே : ritu vidu !!!

---------------------------------------------------------------------------------------------------------

முனாப் : என்ன கங்குலி இப்படி பண்ணிடிங்க ... நீங்களே அடிச்சா நான்லாம் எப்படி field இருக்கிறது ???

கங்குலி : உன்ன மாறி ஆளுங்க இருக்க வரைக்கும் தான் நான் field இருக்க முடியும் !!! இது எப்படி இருக்கு ???

-----------------------------------------------------------------------------------------------------

அல்லகை : தல தல ...

கைபுள்ளை : ஏன்டா இப்படி சித்து மாறி கத்திகிட்டு வர ???

அல்லகை : தல உங்கள விட நம்ம நாட்டுல ஒரு நல்லவன் இருக்கானாம் தல ...

கைபுள்ளை : நம்மள விட நல்லவனா ? யார்ரா அது ?

அல்லகை : அகர்கர்னு ஒருத்தன் இருக்கானாம்

கைபுள்ளை : அடிங்க யார அவன் இவன்கர அவரு நமக்கு சாமி மாறிடா !!! எவளோ அடிச்சாலும் தாங்குற வித்தைய கத்து குடுத்தே அவரு தாண்டா

----------------------------------------------------------------------------------------------------------
இது நகைச்சுவைக்கு மட்டுமே :))

Monday, April 13, 2009

தமிழ் !!!


நாட்டில் இருந்த வரை
உன்னை நினைத்தது கிடையாது

நாடு கடத்த பட்டேன்
உன்னை இழக்க ஆரம்பித்தேன்
தேட தொடங்கினேன்

தேடினேன்
காற்றில் தேடினேன்
கனவில் தேடினேன்
புத்தகத்தில் தேடினேன்
வானொலியில் தேடினேன்
தொலைகாட்சியில் தேடினேன்
கணிப்பொறியில் தேடினேன்

கடைசியில் ஒரு தமிழனிடம்
கண்டுபிடித்தேன்

"நான் தமிழ் நீங்கள் தமிழா ? "
என்று அவன் என்னை கேட்டபோது

தமிழுக்கு அமுதென்று பெயர் வைத்தவரை
மீண்டும் ஒரு முறை வணங்கினேன்

வாழ்க தமிழ் !!! வளர்க தமிழ் !!!

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

Tuesday, April 7, 2009

தேர்தல் திருவிழா !!!

தெருக்களில் கொடிகள்
அதில் கொள்கைகள் !!!

சுவர்களில் சுவரொட்டிகள்
அதில் சாதனைகள் !!!

கம்பங்களில் ஒலிபெருக்கிகள்
அதில் தத்துவங்கள் !!!

மேடையில் தலைவர்கள்
அதில் உறுதிமொழிகள் !!!

வீதியில் மக்கள்
அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறிகள் !!!

இது தான் தேர்தல் திருவிழா :(((( !!!

Monday, April 6, 2009

மீண்டும் மு ரா வின் நக்கல் பேச்சு !!!



கிட்ட தட்ட நான் மு ரா வின் ரசிகன் ஆகிவிட்டேன் என்றே சொல்லலாம் ...
அவரின் பேச்சு திறமையும் நகைச்சுவை உணர்வும் அவர் பேசினதை மீண்டும் மீண்டும் கேட்டாலும் அலுத்து போகவில்லை ...

நான் ஏன் பட்டிமன்றத்தை நாடகம் என்று சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம் ... அவர்களும் அதற்க்கு தயாராகி தான்வருகிறார்கள் ... இன்னார் இன்னார் இதை இதை பேச வேண்டும் என்று முன் கூட்டியே முடிவு செய்கிறார்கள் ... எப்படி இருந்தால் என்ன நமக்கு பொழுது கழிகிறது அவ்வளவு தான் ...

சரி மு ரா ஒரு பட்டிமன்றத்தில் அவரது எதிரணி பேச்சாளர் பேசிவிட்டு போனது எதுவும் நம்பும்படி இல்லை என்பதை கூற ஒரு கதை சொன்னார் .. இது அவருடைய கற்பனையா இல்லையா என்று எனக்கு தெரியாது ஆணால் இதை அவர் சொன்ன விதம் விழுந்து விழுந்து சிரித்தேன் நான் :)))

"அவர போட்டா தொவர மொழைக்கும்
தொவர போட்டா அவர மொழைக்கும்
அப்படி ஒரு தேசத்துல கூந்தலே இல்லாதா
ஒரு ராஜகுமாரி
தூரே இல்லாத குடத்த எடுத்துக்கிட்டு
கரையே இல்லாத கொளத்துக்கு தண்ணிக்கு போனாளாம்
அங்க தலையே இல்லாத மான்
வேரே இல்லாத அருகம் புல்ல மேயிரத
கண்ணே இல்லாத குருடன் பாத்துபோட்டு
காலே இல்லாத முடவன் கிட்ட சொல்ல
அவன் துப்பாக்கி எடுத்து சுட்டான்

குண்டு மான் மேல படாம மான் வயித்தில
இருந்த குட்டி மேல பட்டு
குட்டி செத்து போச்சு

அந்த குட்டிய எடுத்து அறுத்து சமச்சி சாப்பிட்டு
தோல காலில்லாத பந்தல்ல காய போட்டாங்க
அத தலையே இல்லாத பருந்து அடிச்சிகிட்டு போக
அத காலே இல்லாத முடவன் வெரட்டிக்கிட்டு போக

அவன் கால்ல குத்துன கண்டன் கத்திரி முள்ளு
அவன் தலை வழியே வெளியே வர
அதுக்கு வைத்தியம் பார்க்க வைத்தியர் கிட்ட போனான்

அவரு சொன்னாரு ஆழ வேறு அரச வேறு புங்க வேறு புரச வேறு
நாலு வேரையும் கை படமா புடிங்கி
உரல் படமா அரச்சி
நாக்கு படமா நக்குடா
இது முதல் நாள் பத்தியம் அப்படினார்

கண்ட கத்திரி வேற கை படமா புடிங்கி
உரல குப்புறக்க போட்டு உலக்க படமா இடிச்சி
புறங்கையால் எடுத்து நக்குடா
இது இரண்டாவது நாள் பத்தியம் என்றார்


இப்படி பட்ட சிறப்பான வைத்தியம் சொன்ன வைத்தியருக்கு
எதாவது சன்மானம் குடுக்கணும்னு சொல்லி
அடியே இல்லாத படிய எடுத்து
ஓட்ட சாக்குல ஒன்பது முலம் உளுந்து அளந்து
சக்கரமே இல்லாத வண்டில பாரம் ஏத்தி
நொண்டி வண்டி ஓட்ட
குருடன் வழி காட்ட
வண்டி பாட்டுக்கு போய்கிட்டே இருந்துச்சாம் "

ஏதாவது புரிஞ்சுதா இல்லல இதே மாறி தான் எதிர்க்கட்சி அணியின் பேச்சாளர் பேசினார் என்று சொல்லி அவர் அறை மணி நேரம் பேசினதை எவ்வளவு நக்கலாக கேவல படுத்திவிட்டார் பாருங்கள் ...

என்னை பொறுத்த வரை அவர் வெளிச்சத்துக்கு வராத ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர் ...

அவரை தற்போது நடக்கும் லியோனியின் பட்டிமன்றத்தில் காண முடிவதில்லை :(((

அவர் இப்போது எப்படி இருந்தாலும் எங்கிருந்தாலும் வாழ்க !!!