மீண்டும் மு ரா வின் நக்கல் பேச்சு !!!
கிட்ட தட்ட நான் மு ரா வின் ரசிகன் ஆகிவிட்டேன் என்றே சொல்லலாம் ...
அவரின் பேச்சு திறமையும் நகைச்சுவை உணர்வும் அவர் பேசினதை மீண்டும் மீண்டும் கேட்டாலும் அலுத்து போகவில்லை ...
நான் ஏன் பட்டிமன்றத்தை நாடகம் என்று சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம் ... அவர்களும் அதற்க்கு தயாராகி தான்வருகிறார்கள் ... இன்னார் இன்னார் இதை இதை பேச வேண்டும் என்று முன் கூட்டியே முடிவு செய்கிறார்கள் ... எப்படி இருந்தால் என்ன நமக்கு பொழுது கழிகிறது அவ்வளவு தான் ...
சரி மு ரா ஒரு பட்டிமன்றத்தில் அவரது எதிரணி பேச்சாளர் பேசிவிட்டு போனது எதுவும் நம்பும்படி இல்லை என்பதை கூற ஒரு கதை சொன்னார் .. இது அவருடைய கற்பனையா இல்லையா என்று எனக்கு தெரியாது ஆணால் இதை அவர் சொன்ன விதம் விழுந்து விழுந்து சிரித்தேன் நான் :)))
"அவர போட்டா தொவர மொழைக்கும்
தொவர போட்டா அவர மொழைக்கும்
அப்படி ஒரு தேசத்துல கூந்தலே இல்லாதா
ஒரு ராஜகுமாரி
தூரே இல்லாத குடத்த எடுத்துக்கிட்டு
கரையே இல்லாத கொளத்துக்கு தண்ணிக்கு போனாளாம்
அங்க தலையே இல்லாத மான்
வேரே இல்லாத அருகம் புல்ல மேயிரத
கண்ணே இல்லாத குருடன் பாத்துபோட்டு
காலே இல்லாத முடவன் கிட்ட சொல்ல
அவன் துப்பாக்கி எடுத்து சுட்டான்
குண்டு மான் மேல படாம மான் வயித்தில
இருந்த குட்டி மேல பட்டு
குட்டி செத்து போச்சு
அந்த குட்டிய எடுத்து அறுத்து சமச்சி சாப்பிட்டு
தோல காலில்லாத பந்தல்ல காய போட்டாங்க
அத தலையே இல்லாத பருந்து அடிச்சிகிட்டு போக
அத காலே இல்லாத முடவன் வெரட்டிக்கிட்டு போக
அவன் கால்ல குத்துன கண்டன் கத்திரி முள்ளு
அவன் தலை வழியே வெளியே வர
அதுக்கு வைத்தியம் பார்க்க வைத்தியர் கிட்ட போனான்
அவரு சொன்னாரு ஆழ வேறு அரச வேறு புங்க வேறு புரச வேறு
நாலு வேரையும் கை படமா புடிங்கி
உரல் படமா அரச்சி
நாக்கு படமா நக்குடா
இது முதல் நாள் பத்தியம் அப்படினார்
கண்ட கத்திரி வேற கை படமா புடிங்கி
உரல குப்புறக்க போட்டு உலக்க படமா இடிச்சி
புறங்கையால் எடுத்து நக்குடா
இது இரண்டாவது நாள் பத்தியம் என்றார்
இப்படி பட்ட சிறப்பான வைத்தியம் சொன்ன வைத்தியருக்கு
எதாவது சன்மானம் குடுக்கணும்னு சொல்லி
அடியே இல்லாத படிய எடுத்து
ஓட்ட சாக்குல ஒன்பது முலம் உளுந்து அளந்து
சக்கரமே இல்லாத வண்டில பாரம் ஏத்தி
நொண்டி வண்டி ஓட்ட
குருடன் வழி காட்ட
வண்டி பாட்டுக்கு போய்கிட்டே இருந்துச்சாம் "
தொவர போட்டா அவர மொழைக்கும்
அப்படி ஒரு தேசத்துல கூந்தலே இல்லாதா
ஒரு ராஜகுமாரி
தூரே இல்லாத குடத்த எடுத்துக்கிட்டு
கரையே இல்லாத கொளத்துக்கு தண்ணிக்கு போனாளாம்
அங்க தலையே இல்லாத மான்
வேரே இல்லாத அருகம் புல்ல மேயிரத
கண்ணே இல்லாத குருடன் பாத்துபோட்டு
காலே இல்லாத முடவன் கிட்ட சொல்ல
அவன் துப்பாக்கி எடுத்து சுட்டான்
குண்டு மான் மேல படாம மான் வயித்தில
இருந்த குட்டி மேல பட்டு
குட்டி செத்து போச்சு
அந்த குட்டிய எடுத்து அறுத்து சமச்சி சாப்பிட்டு
தோல காலில்லாத பந்தல்ல காய போட்டாங்க
அத தலையே இல்லாத பருந்து அடிச்சிகிட்டு போக
அத காலே இல்லாத முடவன் வெரட்டிக்கிட்டு போக
அவன் கால்ல குத்துன கண்டன் கத்திரி முள்ளு
அவன் தலை வழியே வெளியே வர
அதுக்கு வைத்தியம் பார்க்க வைத்தியர் கிட்ட போனான்
அவரு சொன்னாரு ஆழ வேறு அரச வேறு புங்க வேறு புரச வேறு
நாலு வேரையும் கை படமா புடிங்கி
உரல் படமா அரச்சி
நாக்கு படமா நக்குடா
இது முதல் நாள் பத்தியம் அப்படினார்
கண்ட கத்திரி வேற கை படமா புடிங்கி
உரல குப்புறக்க போட்டு உலக்க படமா இடிச்சி
புறங்கையால் எடுத்து நக்குடா
இது இரண்டாவது நாள் பத்தியம் என்றார்
இப்படி பட்ட சிறப்பான வைத்தியம் சொன்ன வைத்தியருக்கு
எதாவது சன்மானம் குடுக்கணும்னு சொல்லி
அடியே இல்லாத படிய எடுத்து
ஓட்ட சாக்குல ஒன்பது முலம் உளுந்து அளந்து
சக்கரமே இல்லாத வண்டில பாரம் ஏத்தி
நொண்டி வண்டி ஓட்ட
குருடன் வழி காட்ட
வண்டி பாட்டுக்கு போய்கிட்டே இருந்துச்சாம் "
ஏதாவது புரிஞ்சுதா இல்லல இதே மாறி தான் எதிர்க்கட்சி அணியின் பேச்சாளர் பேசினார் என்று சொல்லி அவர் அறை மணி நேரம் பேசினதை எவ்வளவு நக்கலாக கேவல படுத்திவிட்டார் பாருங்கள் ...
என்னை பொறுத்த வரை அவர் வெளிச்சத்துக்கு வராத ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர் ...
அவரை தற்போது நடக்கும் லியோனியின் பட்டிமன்றத்தில் காண முடிவதில்லை :(((
அவர் இப்போது எப்படி இருந்தாலும் எங்கிருந்தாலும் வாழ்க !!!
No comments:
Post a Comment