Wednesday, March 18, 2009

கவியரசு கலைஞரின் இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டு இருந்தால் ???





நேற்று நான் லியோனி யின் சமூக நல கருத்துக்களை அதிகம் வலியுறுத்தி பாடியது பட்டுகோட்டையா கண்ணதாசனா பட்டிமன்றம் கேட்டு கொண்டிருந்த போது பட்டுகோட்டையே என்று பேசிய கவிஞர் மு ரா கண்ணதாசனை மோசமான தத்துவவாதி என்று கூறுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு கூறினார் ...

கவியரசுவின் இரங்கல் கூட்டத்திற்கு சென்றிருந்த தற்போதைய முதல்வர் கருணாநிதி அங்கயும் தன் நக்கல் தனத்தை விடவில்லை ... அங்க போய்

"யார் அழைத்தாலும் சென்று விடுவாயே கண்ணதாசா
அழைத்தது எமன் என்று தெரிந்துமா சென்று விட்டாய் ? "

என்று பாடியிருக்கிறார். கவியரசு யாரவது கட்சி ஆரம்பித்தால் அதில் போய் சேர்ந்து விடுவார் என்பதை தான் கலைஞர் அந்த சூழ்நிலையிலும் சொல்லி காமிக்கிறார் ...

இதை கூறி பட்டிமன்றத்தில் கவிஞர் மு ரா கண்ணதாசன் ஒரு நல்ல கவிஞர் ஆனால் மோசமான தத்துவவாதி என்று வாதாடி கொண்டு இருந்தார் ...

இதை கேட்டு கொண்டிருக்கும் போது எனக்கு ஒன்று தோன்றிய்து கவியரசுக்கு முன் கலைஞர் இறந்து அந்த இரங்கல் கூட்டத்தில் கவியரசு கலந்து கொண்டு இருந்திருந்தால் என்ன பாடியிருப்பார் என்று ஒரு கற்பனை ...

"யாரையும் உன் பேச்சு திறமையால் ஏமாற்றி விடுவாயே கருணாநிதி
எமனை உன்னால் ஏமாற்ற முடியவில்லையா ? "

கவியரசு அப்படி பாடியிருப்பாரா என்று தெரியவில்லை ஆனால் இருவருக்கும் இடையே இருந்த பகையில் கண்டிப்பாக நக்கலாக தான் எதாவது பாடியிருப்பார்.

இதெல்லாம் கவிங்கருகளுக்கே உள்ள லொள்ளு எகத்தாளம் என்று நினைகிறேன் !!!

No comments: