Wednesday, March 18, 2009

கவியரசு கலைஞரின் இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டு இருந்தால் ???





நேற்று நான் லியோனி யின் சமூக நல கருத்துக்களை அதிகம் வலியுறுத்தி பாடியது பட்டுகோட்டையா கண்ணதாசனா பட்டிமன்றம் கேட்டு கொண்டிருந்த போது பட்டுகோட்டையே என்று பேசிய கவிஞர் மு ரா கண்ணதாசனை மோசமான தத்துவவாதி என்று கூறுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு கூறினார் ...

கவியரசுவின் இரங்கல் கூட்டத்திற்கு சென்றிருந்த தற்போதைய முதல்வர் கருணாநிதி அங்கயும் தன் நக்கல் தனத்தை விடவில்லை ... அங்க போய்

"யார் அழைத்தாலும் சென்று விடுவாயே கண்ணதாசா
அழைத்தது எமன் என்று தெரிந்துமா சென்று விட்டாய் ? "

என்று பாடியிருக்கிறார். கவியரசு யாரவது கட்சி ஆரம்பித்தால் அதில் போய் சேர்ந்து விடுவார் என்பதை தான் கலைஞர் அந்த சூழ்நிலையிலும் சொல்லி காமிக்கிறார் ...

இதை கூறி பட்டிமன்றத்தில் கவிஞர் மு ரா கண்ணதாசன் ஒரு நல்ல கவிஞர் ஆனால் மோசமான தத்துவவாதி என்று வாதாடி கொண்டு இருந்தார் ...

இதை கேட்டு கொண்டிருக்கும் போது எனக்கு ஒன்று தோன்றிய்து கவியரசுக்கு முன் கலைஞர் இறந்து அந்த இரங்கல் கூட்டத்தில் கவியரசு கலந்து கொண்டு இருந்திருந்தால் என்ன பாடியிருப்பார் என்று ஒரு கற்பனை ...

"யாரையும் உன் பேச்சு திறமையால் ஏமாற்றி விடுவாயே கருணாநிதி
எமனை உன்னால் ஏமாற்ற முடியவில்லையா ? "

கவியரசு அப்படி பாடியிருப்பாரா என்று தெரியவில்லை ஆனால் இருவருக்கும் இடையே இருந்த பகையில் கண்டிப்பாக நக்கலாக தான் எதாவது பாடியிருப்பார்.

இதெல்லாம் கவிங்கருகளுக்கே உள்ள லொள்ளு எகத்தாளம் என்று நினைகிறேன் !!!

Tuesday, March 10, 2009

ஏமாற்றாதே !!!

நான் ஒவ்வொரு முறை ஏமாரும்போதும்
என்னுள் நான் சொல்லிகொள்வது
அடுத்தவர்களை
ஏமாற்றாதே என்று !!!

Friday, February 6, 2009

இருட்டில் தேடுகிறேன் !!!


அரண்டு போய் இருக்கிறேன்
இருண்டதெல்லாம் பேயாக தெரிகிறது !!!
எதிர்காலம் கண்ணுக்கு தெரிய கூடாத
என ஏங்குகிறேன்
நிகழ காலமோ இருண்டு இருக்கிறது
இருட்டில் தேடுகிறேன்
வெளிச்சமான எதிர்காலத்தை
எதுவும் தென்படவில்லை
அய்யோ எதிர்காலமும்
இருண்டதாக இருக்குமோ ??? :(((

naan oru software enginner enakku ippo vela illa future la vela kidaikuma ennanu therla kidaikumngarathu arikuri yae illa ... appo naan ennuale ulari kondathu ....

Sunday, January 25, 2009

நாம் முறமா சல்லடையா ???

முறமும் சல்லடையும் ஒரே வேலை தான் செய்கின்றன
இரண்டும் நல்லவையையும் கெட்டவயையும் பிரிக்க உதவுகின்றன
ஆனால்
முறம் நல்லவையை வைத்துக்கொண்டு
தீயவைகளை விட்டுவிடுகிறது
சல்லடையோ தீயவைகளை வைத்துக்கொண்டு
நல்லவைகளை விட்டுவிடுகிறது
நாம் யார் ???

Source - Leoni pattimandram

Wednesday, January 7, 2009

வாழ்க இந்தியா !!!

அமெரிக்காவில் காலடி பட்டது
கண்கள் அகல விரிந்தது
நாம் இரண்டாய் போய் விட்டோமே
நான்காக இருந்திருக்க கூடாத என நினைத்தது !!

அழகு எங்கு பார்த்தாலும் அழகு
சாலையில் ஓடும் கார் முதல்
மாலையில் நடக்கும் நாய் வரை அழகு !!

சுத்தமான காற்றை சுவாசிக்கிறேன்
என்றது நாசி !

சுகாதரமான உணவை உன்னுகிறேன்
என்றது வயிர் !

இப்பொழுதெல்லாம் என் மேல் தூசியே படுவதில்லை
என்றது கால்கள் !

கணினியை முத்தமிடும் சுகமே சுகம்
என்றது கைகள் !

எதை பார்த்தாலும் பார்த்த உடனே ஆ
என்றது வாய் !

அரிசியை மறந்த நாக்கு
சிக்கெனுக்கும் சீஷுக்கும் அலைந்தது !

செந்தமிழா அப்படி என்றால் என்ன
என்றது செவி !

ஒவ்வொரு மாதம் முதல் தேதியும்
ராமானுஜ கணக்குகள் போட்ட மூளை
உன் கனவுகள் நிறைவேற போகிறது என்றது

உடல் சிலிர்த்தது
உள்ளம் சிரித்தது
மாயை கண்டு மயங்கியர்வர்கள்
மாண்டு போகும் வரை
தாய் நாடு தழைக்காது என்றது

கதாநாயகனை போல் என்னால்
உடனே ஊருக்கு புறப்பட முடியவில்லை
மனசாட்சியை ஊமை ஆக்க
முடியவில்லை
என்னை செவிடு ஆக்கி கொண்டு
இன்னும் அமெரிக்காவில் இருக்கிறேன் :((((
இந்தியா வாழ்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் !!!

வாழ்க இந்தியா !!!

Friday, December 26, 2008



:))) ஸ்ரீ ரஜினி !!!

கடமையை
செய்
பலனை எதிர்பார்க்காதே
இது கீதைல சொன்னது

கடமையை செய்
பலனை எதிர்பார்
இது ரஜினி போதைல சொன்னது :) !!!

Inspired from Vivekh's comedy in Thithikuthe movie ...

Wednesday, December 24, 2008

லட்சியம் !!!

லட்சியங்கள் ஏன் தோற்று போகின்றன என்று நான் நேற்று நினைத்த போது என்னுள் நானே உழறி கொண்டது ....

சூழ்நிலையா லட்சியமா
என்ற சூழ்நிலையில்
சூழ்நிலை வென்று விடுகிறது !!!

விட்டில் பூட்சியாவது
விளக்கும் அணையும் வரை இருக்கும்
ஆனால்
லட்சியங்கள் இறந்தே பிறக்கின்றன சூழ்நிலையால் !!!

லட்சியம் தன் சிறகை விரித்து
பறக்கும் போது
சூரியனையும் குளிர செய்யலாம்
வானையும் அளந்து பார்க்கலாம் !!!

மேல் கிளாஸ் இன் லட்சியம்
ஊருக்கு உதவாது !!!
மிடில் கிளாஸ் இன் லட்சியம்
வெளியவே வராது !!!
லோ கிளாஸ் க்கு லட்சியமே
கிடையாது !!!
இது தான் லட்சியம் படும் பாடு :(