IPL காமெடிகள் பாகம் - 1 (Rajaasthan royals vs Kolkatta knight riders 10th match 23/04/2009)!!!
ஷாருக் கான் : கங்குலி நீ அந்த ரெண்டு பால் பொறுமையா விளையாடி இருந்துருந்த இன்னைக்கு நாம ஜெயிசுருக்கலாம்ல ???
கங்குலி : ஏன் கெட்ட நேரம் அப்போன்னு பாத்து என் கண்ணுல ஸ்கோர் போர்டு பட்டுருச்சு ... அத பாத்துட்டு நானா அவளோ ரன் அடிச்சேன்னு confuse ஆனா நேரத்துல அவுட் பண்ணிடாங்க ...
ஆமா நெஜமாலுமே நான் தான் அவளோ ரன் அடிச்சனா ?
ஷாருக் கான் : யாரங்கே ???
மென்டிஸ் : சொல்லுங்க எஜமான் ...
ஷாருக் : இதுக்கு அவனே பரவால (தலைல அடிச்சிகிட்டே)
-----------------------------------------------------------------------------------------------
வார்னே : மச்சான் கும்முன்னு ஒரு பௌன்செர் போடு கங்குலிய அவுட் பண்ணிரலாம் ...
முனாப் படேல் : பௌன்செர்னா என்ன மச்சான் ???
வார்னே : டேய் நீ ஒரு பாஸ்ட் பவுலர்டா ...
முனாப் : அப்படி தாண்டா மச்சான் எல்லோரும் சொல்லுறாங்க நீயும் நம்பிட்டயாடா ?
வார்னே : கடவுளே என்ன காப்பாத்துப்பா ....
(கங்குலி அந்த ஓவர்ல அடி மரண அடி ... அந்த ஓவர் முடிஞ்ச உடனே)
வார்னே : அந்த கடவுளே வந்தாலும் இனிமே உன்ன காப்பாத்த முடியாதுடா ...
முனாப் : புதுசா எதாவது சொல்லு மச்சான் ...
வார்னே : ritu vidu !!!
---------------------------------------------------------------------------------------------------------
முனாப் : என்ன கங்குலி இப்படி பண்ணிடிங்க ... நீங்களே அடிச்சா நான்லாம் எப்படி field ல இருக்கிறது ???
கங்குலி : உன்ன மாறி ஆளுங்க இருக்க வரைக்கும் தான் நான் field ல இருக்க முடியும் !!! இது எப்படி இருக்கு ???
-----------------------------------------------------------------------------------------------------
அல்லகை : தல தல ...
கைபுள்ளை : ஏன்டா இப்படி சித்து மாறி கத்திகிட்டு வர ???
அல்லகை : தல உங்கள விட நம்ம நாட்டுல ஒரு நல்லவன் இருக்கானாம் தல ...
கைபுள்ளை : நம்மள விட நல்லவனா ? யார்ரா அது ?
அல்லகை : அகர்கர்னு ஒருத்தன் இருக்கானாம்
கைபுள்ளை : அடிங்க யார அவன் இவன்கர அவரு நமக்கு சாமி மாறிடா !!! எவளோ அடிச்சாலும் தாங்குற வித்தைய கத்து குடுத்தே அவரு தாண்டா
----------------------------------------------------------------------------------------------------------
இது நகைச்சுவைக்கு மட்டுமே :))